இது நடந்து சுமர் 7 ஆண்டுகள் இருக்கும். பொறியியல் சேர்ந்த தருணத்தில் Pen Drive வாங்க என் அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். அவன் என்னக்கு சொன்னது இரண்டு செய்திகள்.
1. விலை அதிகமா இருந்தாலும் நல்ல நிருவனத்துடையதாக இருக்க வேண்டும்.
2. சீனாவில் தயாரிக்கப்படதாக இருக்க கூடாது. (இதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
விளைவு,
Sony Vaio Laptop - Made In China
Sony Xperia X10 Minipro - Made In China
Micromax Canvas 2 Phablet - Made In China
Sony Wireless mouse - Made In China
Many other laptop accessories, gift articles, utilities etc....are Made In China.
கிட்டத்தட்ட எல்லாமே சீன பொருட்கள்.
இன்று அவன் என் வீட்டின் (நாட்டின்) வடக்கு வாசற்படியில் நுழைந்துவிட்டான். தெற்கு புறத்து நீடிப்பை அழித்துவிட்டான். தளம் அமைத்து அமர்ந்துவிட்டான். இப்போது எனக்கு ரோஷம் வந்து எனன்ன செய்வது.
என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவேண்டியதுதானே.
1. சீனனின் எந்த தயாரிப்பையும் ஆதரிக்க போவதில்லை. ( தலையை விழுங்கும் கிரீடம் அழகாக இருந்தால் என்ன? விலை குறைவாக இருந்தால் என்ன? )
2. என்னிடம் கலந்து ஆலோசித்து பொருட்கள் வாங்குபவர்களுக்கும் இதை சொல்லுவேன்.
(குறைந்தபட்சம் இங்கிருந்து தொடங்குவோம்)
உலகமயம் ஆதலில் இதெல்லாம் சாத்தியமா? மற்ற பொருட்களின் விலை கூட இருந்தால்?! தேடிக்கொண்டு அலைய வேண்டி இருக்குமோ?! அப்படி என்றல் நாம் வாங்குவதே அமெரிக்க கூலி தானே!? அப்பொழுது மற்றநாட்டு பொருட்கள்??? இதை தவிர வேறு எதாவது மாற்று உள்ளதா?
இப்படி யோசித்தபடியே இந்த முடிவை பின்பற்ற தொடங்கிவிட்டேன்.
இந்த ஒத்துழையாமைக்கு ஒத்துழைக்கும் உங்களுக்கு நன்றி.
கூடுதல் தகவல்கள்:
1. ஒரு அல்ப சந்தோசம். அந்த Pendrive பழுதுபட்டதால் சரி செய்ய அனுப்பினேன். அதற்கு மாற்றாக அனுப்பபட்டது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made In India).
2. இரு அதிர்ச்சிகள்:
சீனன் அனுப்பும் ஏதோ ஒரு கருமத்தை நம்ம ஊர் தனியார் பால் நிறுவனங்களில் சில பயன்படுத்தி "அடடே என்ன கெட்டியான பால் " என்ற பாராட்டை பெறுகின்றன என்பது பத்திரிக்கை செய்தி.
கோழி முட்டையை கூட 100% செயற்கையாக மெழுகை பயன்படுத்தி தயாரிக்கிறான். விலையோ நான்கில் ஒரு பங்குதான். இதை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது அவனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. (கோழி முட்டை போடும் சீனத்து பெட்டையை பற்றிய தகவல் தந்ததற்ககு திரு.தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.)
இதை படித்து உணர்வுகளை பகிர்த்துகொண்ட உங்களுக்கு மிக்க நன்றி.